வெள்ள பாதிப்பின் போது சுவர்கள் உடைவது ஏன் ?
--------------------------------------------------------------------


பொதுவாக , ‘தரை மட்டத்தில், ‘பீம்’ போடாமல் கட்டப் பட்ட குடியிருப்பு சுவர்கள், வெள்ள பாதிப்பில் உடைந்து நொறுங்கும் நிலை ஏற்படும். அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது பாறை இருக்கும் ஆழம் வரை அஸ்திவாரம் அமைக்க வேண்டும். இவ்வாறு அஸ்திவாரம் அமைத்தாலும், தரை மட்டத்தில் அனைத்துத் தூண்களையும் இணைக்கும் வகையில், ‘பீம்’கள் அமைக்க வேண்டும். இந்த, ‘பீம்’களின் மேல் தான் சுவர்களை எழுப்ப வேண்டும்.
ஆனால், சில இடங்களில் முறையாக அஸ்திவாரம் அமைத்தாலும் தரை மட்டத்தில், ‘பீம்’கள் அமைப்பதில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். சில கட்டுமானங்களில், கட்டடத்தின் பிரதான சுவர்கள் அமையும் இடங்களில் மட்டும், ‘பீம்’களை அமைத்து விட்டு, சார்பு சுவர்கள் அமையும் இடங்களில்,‘பீம்’களை அமைப்பது இல்லை.
இவ்வாறு, ‘பீம்’கள் அமைக்கப்படாத இடங்களில் எழுப்பப்படும் சுவர்கள், மழைநீர் அதிகஅளவில் தேங்கினாலும், மண்ணில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலும் உடைந்து நொறுங்கிவிடும். இது போன்ற சார்பு சுவர்கள் உடைந்து நொறுங்குவது கட்டடத்தின் உறுதிக்கும் சவாலாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
மூன்று அடிக்கு தண்ணீர் தேங்கினால்..
பொதுவாக, அனைத்து வகையான கட்டுமானங்களிலும் ஒற்றைக்கல் சுவர் எனப்படும்.4.5 அங்குல சுவர் எழுப்புவதை தவிர்க்க வேண்டும். இந்த சுவர்கள் உள்ள பகுதியில் தொடர்ந்து, சில மணி நேரம், மூன்று அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கினாலும் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
இதைத் தவிர்க்க, எந்த சுவரானாலும் அதை தரையில் இருந்து நேரடியாக கட்டக் கூடாது. தரை மட்டத்தில், ‘கான்கிரீட் பீம்’ அமைத்து அதன் மேல் தான் சுவர் எழுப்ப வேண்டும்.
சாதாரண பயன்பாட்டுக்காக கட்டினாலும், இரண்டு செங்கற்களை பயன்படுத்தி, முக்கால் அடி அகலத்துக்கு கட்டுமானம் இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog